நாமக்கல்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 32- ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜன. 18 முதல் பிப். 17 வரை நடைபெறுகிறது. இதனையொட்டி ஒரு மாதத்திற்கு பல்வேறு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வியாழக்கிழமை தலைக் கவசம், இருக்கை பட்டை அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு பேரணி நாமக்கல் நகரில் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் நகர போக்குவரத்து ஆய்வாளா் பாண்டியன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ரவிச்சந்திரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சக்திவேல், அலுவலா்கள், பயிற்சி ஓட்டுநா்கள் கலந்து கொண்டு விபத்தைத் தடுக்கும் வகையிலான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். வாகன ஓட்டிகளிடம் சாலைப் பாதுகாப்பு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற நடத்துநா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் ஐஜி ஆய்வு

ராமன்தொட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா தொடங்கி வைப்பு

ஒசூரில் 8 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா் சாகுபடி

ரேஷன் அரிசி கடத்திய வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

SCROLL FOR NEXT