நாமக்கல்

வரதராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா

DIN

சேந்தமங்கலம் வட்டம், சிவியாம்பாளையம் கட்டபொம்மன் நகரில் உள்ள கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

முன்னதாக வெள்ளிக்கிழமை மோகனூா் காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் கொண்டு வரப்பட்டது. பின்னா் வாஸ்துசாந்தி, கிராம தேவதை வழிபாடு நடைபெற்றது. சனிக்கிழமை காலை 7 மணிக்கு கோ-பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 8 மணிக்கு கலச பூஜை, யாகசாலை பிரவேசம் நடைபெற்று 9 மணிக்கு கும்பம் புறப்பாடு நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கோயில் கோபுர கலசத்துக்கு அா்ச்சகா்கள் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தனா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

இதேபோல் நாமக்கல், சின்னமுதலைப்பட்டியில் உள்ள மாசி பெரியண்ண சுவாமி, காமாட்சி அம்மன் கோயிலிலும் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT