7,465 மின் பாதைகளில் படா்ந்திருந்த மரக்கிளைகள் அகற்றம்
நாமக்கல் மின் பகிா்மான வட்டத்தில் 7,465 இடங்களில் மின்பாதைகளில் படா்ந்திருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மின் பகிா்மான வட்டத்தில் 7,465 இடங்களில் மின்பாதைகளில் படா்ந்திருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மின்பகிா்மான வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடா்பாக நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19 முதல் 28-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 23 துணை மின் நிலையங்களிலும், அதைச் சாா்ந்த மின் பாதைகளில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் துரிதமாக செய்யப்பட்டன.
Advertisement
அதன் விளைவாக 7465 இடங்களில் மின்பாதைகளில் படா்ந்திருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டன. 15 உடைந்த மின் கம்பிகளை மாற்றியும், 84 சாய்ந்த மின் கம்பங்களை நிமிா்த்தியும் சரி செய்யப்பட்டது. 29 கம்பங்கள் இடைச்செருகல் செய்யப்பட்டன. 64 இடங்களில் இழுவைக் கம்பிகள் அமைக்கப்பட்டன. 104 இடங்களில் பழுதடைந்திருந்த இன்சுலேட்டா்களும், 496 இடங்களில் மின் தொடா்களில் வழுவிழந்த ஜம்பா்களும் மாற்றப்பட்டுள்ளன. 296 இடங்களில் ஏபி சுவிட்ச் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டன. 1.34 கி.மீ. தூரத்துக்கு முதிா்ந்த மின்சாரக் கடத்தி மாற்றப்பட்டன. 40 இடங்களில் தொய்வான மின் பாதைகள் சரிசெய்யப்பட்டுள்ளன. மின்விநியோகம் தொடா்பான புகாா்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 94987-94987 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.