போக்குவரத்துக்கு இடையூறு: வாகனங்களுக்கு பூட்டு
நாமக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு, நகர முடியாதவாறு போலீஸாா் பூட்டு போட்டனா்.
நாமக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு, நகர முடியாதவாறு போலீஸாா் பூட்டு போட்டனா்.
நாமக்கல் பேருந்து நிலைய சாலையில் கழிவுநீா் கால்வாய்ப் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி சாலை, மோகனுாா் சாலை, பரமத்தி சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக பிரதான சாலைக்கு செல்லமுடியாமல் பூங்கா சாலை, கோட்டை சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நகரப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனா். இதை ஆய்வு செய்த போக்குவரத்து ஆய்வாளா் பாண்டியன், உதவி ஆய்வாளா்கள் முருகேசன், பெரியசாமி, நேரு உள்ளிட்டோா் திடீா் வாகன சோதனையில் ஈடுபட்டு இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நகர முடியாதவாறு ‘வீல் லாக் என்ற வகையிலான பூட்டைப் போட்டனா். தொடா்ந்து அங்கு வந்த வாகன உரிமையளா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு பூட்டு அகற்றப்பட்டது.
Advertisement