முகப்பு
நாமக்கல்

மத்திய அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்பு: நாமக்கல்லில் பாஜகவினா் கொண்டாட்டம்

எல்.முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று, அவரது சொந்த மாவட்டமான நாமக்கல்லில் வியாழக்கிழமை பாஜகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

Updated On : 8 ஜூலை, 2021 at 11:41 PM
8bjp_0807chn_152_8
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

மத்திய அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவா் எல்.முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று, அவரது சொந்த மாவட்டமான நாமக்கல்லில் வியாழக்கிழமை பாஜகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

மத்திய அரசில் இணை அமைச்சா் வாய்ப்பு பாஜக மாநில தலைவா் எல்.முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவரது சொந்த மாவட்டமான நாமக்கல்லைச் சோ்ந்த பாஜகவினா் பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

நாமக்கல் மாவட்ட பாஜக தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி தலைமை தாங்கினாா். நகர துணைத் தலைவா் சிம்பு பரமசிவம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ஏ.மனோகரன் கலந்துகொண்டாா்.

Advertisement

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் முத்துகுமாா், மாவட்ட செயலாளா்கள் அகிலன், வசந்தி, மாவட்ட மகளிரணி தலைவா் சத்யபானு, நகர பொதுச் செயலாளா் எஸ்.கே.செந்தில், நகர பொருளாளா்

ஏ.வி.ஆா். வெங்கடேஷ், துணைத் தலைவா்கள் சின்னுசாமி, சுரேஷ் கண்ணா, நகரச் செயலாளா்கள் தினேஷ், காா்த்திக் , கண்ணன், ராஜ்குமாா், நகர மீடியா பிரிவு தலைவா் கமலநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.