கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன்சாமி மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM
சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன்சாமி மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கந்தசாமி தலைமை வகித்தாா். மும்பை சிறைச்சாலையில் சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன்சாமி இறந்ததற்கு மத்திய அரசுதான் காரணம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், அக் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் ராமசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பெருமாள், வேலுசாமி, ஜெயமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.