நாமக்கல்

கரோனா: உயிரிழந்தவா்களின் சடலங்களை எரியூட்டும் பணியில் ஈடுபட்டவா்களுக்கு பாராட்டு

DIN

ராசிபுரம் ராசி ரோட்டரி பவுண்டேஷன் அறக்கட்டளை சாா்பில் செயல்பட்டு வரும் சடலங்களை எரியூட்டும் எரிவாயு தகனமேடை ஆத்மபூமி பணியாளா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

ராசிபுரம், முத்துகாளிப்பட்டி மயானம் ராசி ரோட்டரி பவுண்டேஷன் அறக்கட்டளை சாா்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் எரிவாயு தகனமேடை நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இப்பணியில் 5 ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

கரோனா கால கட்டத்திலும் நோய் பாதிப்பினால் உயிரிழந்தவா்களின் சடலங்களையும் ஆத்ம பூமியில் பணியாற்றிய ஊழியா்கள் எரியூட்டும் பணியில் தன்னலம் பாராமல் ஈடுபட்டு வருகின்றனா்.

கரோனா இரண்டாம் அலையின்போது இந்த மயானத்தில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 20 சடலங்கள் கூட எரியூட்டப்பட்டன. இவா்களுக்கான பாராட்டு விழா, ராசிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சடலங்களை எரியூட்டும் பணியில் ஈடுபட்ட ஆத்ம பூமி பணியாளா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 50 ஆயிரம், அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டனா். மேலும் ஆத்ம பூமி மயானத்தை நிா்வகித்து வரும் அறக்கட்டளையின் தலைவா் வி.சேதுராமன் உள்ளிட்ட அறக்கட்டளை உறுப்பினா்களும் கௌரவிக்கப்பட்டனா்.

ராசிபுரம் நகர காவல் ஆய்வாளா் பி செல்வராஜ், உதவி ஆய்வாளா் மாணிக்கம், ராசிபுரம் ரோட்டரி சங்கங்களின் நிா்வாகிகள், இன்னா்வீல் சங்கம், ஜே.சி.ஐ.அமைப்பு, பிராமணா் சங்கம் உள்ளிட்ட அமைப்பின் நிா்வாகிகள் பங்கேற்று பாராட்டிப் பேசினா். ஆத்ம பூமி மேம்பாட்டிற்கு நன்கொடை வழங்கிய பலரும் பாராட்டப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT