முகப்பு
நாமக்கல்

தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On : 16 ஜூலை, 2021 at 11:56 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளா் நலவாரியத்துக்கு தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கு புதிய நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அரசு அங்கீகாரம் பெற்ற தையற்பயிற்சி நிலையங்களில் தோ்ச்சி பெறும் தொழிலாளா்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை, உயா்கல்விக்கான நுழைவுத் தோ்வு எழுதும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டங்கள் மூலம் பயன்பெற தொழிலாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

தொழிலாளரின் மாத உச்ச வரம்பு, அடிப்படைச் சம்பளம் சோ்த்து ரூ. 25,000-க்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளா் நல வாரிய அலுவலகத்தையோ, மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் 044-24321542, செல்லிடப்பேசி எண் 89397-82783 ஆகியவற்றின் மூலம் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.