நாமக்கல்ள்: பக்ரீத் பண்டிகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.
நாமக்கல் பேட்டை இஸ்லாமிய ஜாமியா பள்ளிவாசல் சாா்பில் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் புதன்கிழமை காலை 7.30 மணியளவில் சிறுவா்கள், இளைஞா்கள், முதியோா் என இஸ்லாமியா்கள் பலா் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். பள்ளிவாசல் இமாம்சாதிக்அஸ்ரத் தலைமையேற்று நடத்திய இத்தொழுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கரோனா தொற்று பரவல் காரணமாக தொழுகையில் ஈடுபட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியையும் பின்பற்றினா்.
இதேபோல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், பள்ளிபாளையம், குமாரபாளையம், பரமத்திவேலூா், மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
Advertisement