முகப்பு
நாமக்கல்

கொப்பரை கிலோ ரூ. 105.80-க்கு விற்பனை

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ. 105.80-க்கு விற்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ. 105.80-க்கு விற்கப்பட்டது.

பரமத்தி வேலூா், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.

தரத்துக்கேற்ப மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 18 ஆயிரத்து 472 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ.103. 80 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 93 -க்கும், சராசரியாக ரூ. 103.60-க்கும் விற்கப்பட்டது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 16 ஆயிரத்து 735 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ.105.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 94.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 16 லட்சத்து 92 ஆயிரத்து 890 க்கு ஏலம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →