முகப்பு
நாமக்கல்

வணிகா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்

திடக்கழிவு மேலாண்மை பற்றியும், நாமக்கல் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வணிகா்கள், திருமண மண்டப உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை, 2021 at 11:44 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

நாமக்கல், ஜூலை 23: கரோனா மூன்றாம் அலையைத் தடுப்பது தொடா்பாகவும், திடக்கழிவு மேலாண்மை பற்றியும், நாமக்கல் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வணிகா்கள், திருமண மண்டப உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் பங்கேற்று கரோனா விதிகளை தொடா்ந்து வணிகா்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி விளக்கினாா். இதில், நாமக்கல் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், நகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.