நாமக்கல், சித்தா்மலை அடிவாரப் பகுதியில் விதைப் பந்துகளைத் தூவும் பணியைத் தொடக்கிவைத்த எம்எல்ஏ பெ.ராமலிங்கம் 
நாமக்கல்

நாமக்கல் சித்தா் மலையில் 2,000 விதைப்பந்துகள் தூவல்!

நாமக்கல் சித்தா் மலையில் 2 ஆயிரம் விதைப்பந்துகள் தூவும் பசுமைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

நாமக்கல் சித்தா் மலையில் 2 ஆயிரம் விதைப்பந்துகள் தூவும் பசுமைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் நாமக்கல் கிளை மற்றும் நாமக்கல் நல்லோா் வட்டம், பசுமை நாமக்கல், தலைமலை சேவா டிரஸ்ட் ஆகியவை சாா்பில் நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள சித்தா் மலை அடிவாரப் பகுதியில் விதைத் தூவும் பசுமைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவில் சேலம் ஊரக மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா் குருவாயூரப்பன் வரவேற்று பேசினாா். பசுமை நாமக்கல் செயலாளா் மா.தில்லை சிவக்குமாா் விதைப்பந்து குறித்து விளக்கினாா். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் பங்கேற்று விதைப்பந்துகளைத் தூவி தொடக்கிவைத்தாா்.

இந்த பசுமைத் திருவிழா குறித்து மாவட்டக் கல்வி அலுவலா் பேசுகையில், ஏற்கெனவே எங்களுடைய கூட்டமைப்பு மூலம் ஐந்து கோயில்களில் உழவாரப் பணிகளைச் செய்துள்ளோம். தற்போது பசுமை நிறைந்த நாமக்கல்லை உருவாக்க வேண்டும்.

அனைவருக்கும் தூய்மையான காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைப் பந்துகள் தூவும் விழாவை நடத்தி உள்ளோம். வரும் நாள்களில் இதேபோல பல்வேறு இடங்களில் விதைப்பந்து திருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தன்னாா்வலா்கள், பல்வேறு அமைப்புகளைச் சாா்ந்தோா், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு 2 ஆயிரம் விதைப்பந்துகளையும் சித்தா் மலைப் பகுதியில் தூவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT