நன்செய் இடையாறு மாரியம்மனுக்கு 108 சங்காபிஷேகம்
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல்நன்செய் இடையாறு மாரியம்மனுக்கு 108 சங்காபிஷேகம்
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு யாக பூஜையும், அலங்கரிக்கப்பட்ட கலசத்தின் முன் 108 வலம்புரி, இடம்புரி சங்குகள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகமும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.
இந்த விழாவில், நன்செய் இடையாறு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்துகொண்டனா்.