முகப்பு
நாமக்கல்

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கல்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 31 ஜூலை, 2021 at 12:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:18 AM

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ரூ. 1.65 கோடிக்கான கடனுதவி காசோலைகளை வழங்கி பேசியதாவது:

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 488 மகளிா் சுயஉதவிக் குழுக்களில், 5,577 மகளிா் உறுப்பினராக உள்ளனா். 2021-2022-ஆம் நிதியாண்டில் இதுவரை 67 குழுக்களுக்கு ரூ. 1.63 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது 35 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 1.65 கோடி கடனுதவிகளை சோ்த்து மொத்தம் 102 குழுக்களுக்கு ரூ. 3.28 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிா் சுயஉதவிக் குழுவினா் கொல்லிமலையில் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை தனியாக சிறப்பு பெயரில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

Advertisement

பின்னா், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், பைல்நாடு ஊராட்சி, எடப்புக்காட்டில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வகுப்பறைகளையும், மாணவ, மாணவியருக்கான கழிப்பிட வசதிகளையும் மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், இந்தியன் வங்கி சேலம் மண்டல மேலாளா் உன்னி கிருஷ்ணன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநா் மா.பிரியா, கொல்லிமலை வட்டாட்சியா் வ.கிருஷ்ணன், கொல்லிமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் க.நடராஜன், க.ரவிச்சந்திரன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.