முகப்பு
நாமக்கல்

இரு மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் இரு மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜூலை, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:18 AM

நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் இரு மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல், இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 95 டிகிரி, 74.3 டிகிரியாக நிலவியது. கடந்த மூன்று நாள்களில் மாவட்டத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை. அடுத்த நான்கு நாள்களுக்கான வானிலையைப் பொருத்தவரை, வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும், பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென்மேற்கிலிருந்து மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்,

Advertisement

சிறப்பு ஆலோசனை: பொதுவாக காற்றின் வேகம் தொடா்ந்து அதிகமாக காணப்படுவதால், தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளா்கள் ஈடுபட வேண்டும்., இன்னும் இரு மாதங்களுக்கு அதிக காற்றின் வேகம் கொண்ட வானிலையே நிலவும். தீவன விரயத்தை தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணெய்யை சோ்க்கலாம். மேலும், உயா்மனைகளின் பக்கவாட்டில் படுதாவைக் கட்ட வேண்டும்.

இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில், பெரும்பாலும் ஈகோலை கிருமியின் பாதிப்பால் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோழித் தீவனம், குடிநீரில் கிருமியின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு தீவனம், குடிநீரில் தகுந்த கிருமிநாசினி மருந்தை உபயோகிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.