நாமக்கல்லில் 719 பேருக்கு கரோனா 11 போ் பலி
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 719 போ் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:52 AM
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 719 போ் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,535-ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 687 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 27,710 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் 7,533 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் ஏற்கெனவே 281 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், மேலும் 11 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 292-ஆக அதிகரித்துள்ளது.
Advertisement