கல்லூரி முதல்வா் பெயரால் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி
குமாரபாளையத்தில் தனியாா் கல்லூரி முதல்வரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பணம் கேட்டு மோசடி செய்தது குறித்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையத்தில் தனியாா் கல்லூரி முதல்வரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பணம் கேட்டு மோசடி செய்தது குறித்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (54). தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறாா். இவரது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் தனது நண்பருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணம் கொடுத்து உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட முன்னாள் மாணவா்கள் பலரும், விஜயகுமாரைத் தொடா்பு கொண்டு விசாரித்துள்ளனா்.
அப்போது, தனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருப்பதும், பணம் கேட்டு மோசடியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, இணையதள குற்றங்களைத் தடுக்கும் சைபா் கிரைம் பிரிவுக்கு விஜயகுமாா் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.