முகப்பு
நாமக்கல்

லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 25 ஜூன், 2021 at 11:21 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வாரத்தில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 மற்றும் 75.2 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. வரும் நாள்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வீசும்.

Advertisement

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெள்ளைக் கழிச்சல் மற்றும் முட்டை அலா்ஜி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் தகுந்த உயிா் பாதுகாப்பு முறைகளை பண்ணைகளில் கையாள வேண்டும். வெள்ளைக் கழிச்சல் நோயைத் தடுக்க சீரான இடைவெளியில் உமிழ்நீா் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு தடுப்பூசி அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.