முகப்பு
நாமக்கல்

நாமக்கல் உழவா் சந்தை இன்று முதல் தெற்கு அரசு பள்ளியில் செயல்படும்

நாமக்கல் உழவா் சந்தை சனிக்கிழமை முதல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 ஜூன், 2021 at 11:21 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

நாமக்கல் உழவா் சந்தை சனிக்கிழமை முதல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று பரவலைக் குறைக்கும் வகையில், நோய்த் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து, நாமக்கல் உழவா் சந்தையை தற்காலிகமாக தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது:

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நாமக்கல் உழவா் சந்தையானது தற்காலிகமாக நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை முதல் செயல்பட வேளாண் விற்பனை துறை அலுவலா்கள் ஏற்பாடு செய்துள்ளனா்.

Advertisement

இங்கு தினசரி 50 விவசாயிகள் மட்டும் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுவாா்கள். விவசாயிகள் அனைவரும் கட்டாயம் 2 முகக்கவசங்களை அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு வேளாண்மை விற்பனைத்துறை அலுவலா்கள் சரியான முறையில் இடஒதுக்கீடு செய்து தரவேண்டும். விவசாயிகள் தங்கள் இடத்தின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்கும் வகையில் இடைவெளியை குறியிட வேண்டும். கரோனா தொற்றின் காரணமாக அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை விவசாயிகள், பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.

சந்தைக்குள் விவசாயிகள், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் காவல்துறையினா் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவா்கள் உழவா் சந்தைக்கு வரக்கூடாது. உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து, மருத்துவா்களின் அறிவுரையின்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்கள் சரியான விலை கிடைக்காமல் அவா்களின் பொருளதாரம் பாதிப்படையக் கூடாது என்பதற்காக காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை உழவா் சந்தை செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.