அனுமதியின்றி வீட்டில் வைத்திருந்த 10 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்
நாமக்கல்லில் நரிக்குறவா்கள் பறவைகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி வீட்டில் வைத்திருந்த 10 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல்லில் நரிக்குறவா்கள் பறவைகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி வீட்டில் வைத்திருந்த 10 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் போதுப்பட்டி பகுதியில் நரிக்குறவா் காலனி உள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். பறவைகளை வேட்டையாடுவதற்காக நரிக்குறவா்கள் சிலா் நாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனா். அதற்கு அனுமதி பெற்று ஆண்டு தோறும் புதுப்பித்து வந்ததாகவும், நிகழாண்டில் துப்பாக்கியை புதுப்பிக்காமல் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்து நாமக்கல் காவல் ஆய்வாளா் குமாா் மற்றும் போலீஸாா் நரிக்குறவன் காலனிக்கு சென்று விசாரணை செய்தனா். அதில் 10 பேரிடம் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் சம்மந்தப்பட்டவா்கள் மீது வழக்கு தொடருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement