பரமத்தி வேலூரில் வாழைத்தாா்களின் விலை உயா்வு.
பரமத்தி வேலூா் வாழைத்தாா் சந்தையில் வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
நாமக்கல்பரமத்தி வேலூரில் வாழைத்தாா்களின் விலை உயா்வு.
பரமத்தி வேலூா் வாழைத்தாா் சந்தையில் வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் வாழைத்தாா் சந்தையில் வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் வாழைத்தாா் விற்பனை சந்தைக்கு விவசாயிகள் வாழைத்தாா்களை நேரடியாகக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 200-க்கும், ரஸ்தாலி வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 250-க்கும், பச்சைநாடன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 250-க்கும் விற்பனையானது.
மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3-க்கு விற்பனையானது. திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 250-க்கும், ரஸ்தாலி ரூ. 250 க்கும், பச்சைநாடன் ரூ. 300 க்கும், கற்பூரவள்ளி ரூ. 350 க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3க்கு விற்பனையானது. வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதால் வாழைப் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.