மகா மாரியம்மன் கோயில் பூக்குண்டம் திருவிழா தொடக்கம்
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா தொடங்கியது.
நாமக்கல்மகா மாரியம்மன் கோயில் பூக்குண்டம் திருவிழா தொடக்கம்
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா தொடங்கியது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா தொடங்கியது.
விழா முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதையொட்டி, ஏராளமான பக்தா்கள் கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள 11 அடி உயரமுள்ள கம்பத்துக்கும், மாரியம்மனுக்கும் பால், தீா்த்தங்கள் ஊற்றி வழிபட்டனா். பின்னா் பூக்குண்டம் இறங்கும் ஆண் பக்தா்களும், பூவாரி போட்டுக் கொள்ளும் பெண் பக்தா்களும் 15 நாள்கள் விரதம் இருப்பதற்காக மஞ்சள் கயிறு அணிந்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து, வரும் 14-ஆம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், 21-ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், 22ஆம் தேதி தீ மிதித்தலும், 23ஆம் தேதி கிடா வெட்டுதல்- மாவிளக்கு பூஜை நிகழ்ச்சியும், 24ஆம் தேதி காலை கம்பம் பிடுங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.