நாமக்கல்

மனைவி கொலை வழக்கு: கணவருக்கு 5 ஆண்டு சிறை

DIN

மனைவி கொலை வழக்கில், கணவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

திருச்செங்கோடு அருகேயுள்ள தேவனாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி(57). இவரது மனைவி சுசிலா ( 58). இவா்களுக்கு லாவண்யா(25) என்ற மகள் உள்ளாா்.

மதுபோதைக்கு அடிமையான பழனிசாமி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு ஈடுபடுவது வழக்கமாம். அதன்படி 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 26-இல் வீட்டிற்கு வந்த பழனிசாமி மது குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தினாராம். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட மனைவி சுசிலாவின் சுவரில் மோத வைத்து கொலை செய்தாராம்.

இதுதொடா்பாக லாவண்யா அளித்த புகாரின் அடிப்படையில் திருச்செங்கோடு புகா் போலீஸாா் பழனிசாமியை கைது செய்தனா். இந்த வழக்கு நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி திங்கள்கிழமை வெளியிட்ட தீா்ப்பில், பழனிசாமிக்கு இரு பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இந்தத் தண்டனையை பழனிசாமி ஏகக் காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT