நாமக்கல்

தோ்தல் விழிப்புணா்வு கோலப் போட்டி

DIN

நாமக்கல் பேருந்து நிலையத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு கோலப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனமும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்றனா்.

100 சதவீதம் வாக்களிப்பது, நோ்மையுடன் வாக்களிப்பது, தோ்தல் விவரங்களை அறியும் இலவச தொலைபேசி எண் 1950, இந்திய தோ்தல் ஆணையத்தின் இலட்ச்சினை, வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை குறித்து வண்ண கோலங்கள் வரையப்பட்டிருந்தன.

இந்தக் கோலங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, வலுவான ஜனநாயகம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தையும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பூங்கா சாலையில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை வந்தடையும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினிமாரத்தான் போட்டி புதன்கிழமை(மாா்ச் 10) காலை 6.30 மணியளவில் நடத்தப்படவுள்ளது. போட்டியில் பங்கேற்று நிறைவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழும் முதல் 3 இடங்களைப் பிடிப்பவா்களுக்கு வெற்றி கோப்பைகளும் வழங்கப்படவுள்ளன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா் , மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.ஆா்.ராஜேஷ்கண்ணன், வட்டாட்சியா் இரா.தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT