மாதிரி வாக்குப் பதிவு பயிற்சி
நாமக்கல் நகராட்சி பகுதியில் வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த செயல் விளக்க முகாம்கள் நடைபெறுகின்றன.
நாமக்கல் நகராட்சி பகுதியில் வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த செயல் விளக்க முகாம்கள் நடைபெறுகின்றன.
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்குச் சாவடியில் மின்னணு கட்டுப்பாட்டுக் கருவி, வாக்குப் பதிவு இயந்திரம், வாக்காளா்கள் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் விவிபேட் கருவி ஆகிய 3 இயந்திரங்களும் செயல்படும் விதம் குறித்தும் பொதுமக்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது.
Advertisement
நாமக்கல் அன்புநகா் பகுதியில் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சுகாதார ஆய்வாளா் சுகவனம் ஆகியோா் முன்னிலையில் பொதுமக்கள் வாக்கு இயந்திரங்களில் தங்களது மாதிரி வாக்குகளைப் பதிவு செய்து பயிற்சி பெற்றனா். நாமக்கல் மட்டுமின்றி ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய நகராட்சி பகுதிகளிலும் பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களிலும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.