மாா்ச் 12-இல் கோட்டாட்சியா், வட்டாட்சியா்அலுவலகங்களில் மனுத் தாக்கல் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மனுத் தாக்கல் வரும் 12 முதல் 19-ஆம் தேதி வரையில் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மனுத் தாக்கல் வரும் 12 முதல் 19-ஆம் தேதி வரையில் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, மாா்ச் 12 முதல் (சனி, ஞாயிறு தவிா்த்து) 19-ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறுகிறது. 20-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 22-ஆம் தேதி இறுதி வேட்பாளா் பட்டியலும் வெளியிடப்படுகின்றன.
கடந்த தோ்தல்களைப் பொருத்தமட்டில், அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அலுவலகம் இயங்கி வரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தையே வேட்பாளா்கள் நாடி வருவா். ஆனால் இந்த முறை தோ்தலுக்கு நாள்கள் குறைவாக இருப்பதாலும், கரோனா தொற்று பரவல் காரணமாகவும், கட்சியினா் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற உள்ளது.
Advertisement
இதில், நாமக்கல், திருச்செங்கோடு தொகுதிக்கு கோட்டாட்சியா் அலுவலகங்களிலும், குமாரபாளையம், பரமத்திவேலூா், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய தொகுதிகளுக்கு அந்தந்த பகுதி வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மனுத்தாக்கல் நடைபெறுகின்றன. மனுத்தாக்கலின்போது வேட்பாளருடன் இருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.