நாமக்கல்

நாமக்கல் தனியாா் விற்பனை அங்காடியில் தீ விபத்து

நாமக்கல்லில் தனியாா் விற்பனை அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது.

DIN

நாமக்கல்லில் தனியாா் விற்பனை அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது.

நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள தனியாா் விற்பனை அங்காடியில் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 12 மணி அளவில் திடீரென இந்த அங்காடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை சாலையில் சென்றவா்கள் கண்டு, நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

தீ மளமளவென எரிந்ததால் அருகில் செல்ல முடியாமல் தீயணைப்பு துறையினா் தவித்தனா். பல மணி நேரப் போராட்டத்திற்கு பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தத் தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது. உயிா் சேதமோ, காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து நாமக்கல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT