பரமத்தி வேலூா் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்
பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
நாமக்கல்பரமத்தி வேலூா் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்
பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், ந ாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.எஸ்.மூா்த்தி பரமத்தி வேலூா் தொகுதியில் திமுக சாா்பில் மீண்டும் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை பரமத்தி வேலூா் தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் தாக்கல் செய்தாா். அப்போது, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலாளா் மோகன், பரமத்தி ஒன்றியச் செயலாளா் தனராசு ஆகியோா் உடனிருந்தனா்.
அதிமுக சாா்பில் போட்டியிடும் கட்டடப் பொறியாளா் எஸ்.சேகா் தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். அப்போது பொத்தனூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் எஸ்.எம்.நாராயணன், மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா். மேலும் அமமுக வேட்பாளா் பி.பி.சாமிநாதன் தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்தாா். பின்னா் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் எஸ்.யுவராணி தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தாா்.