நாமக்கல்

துப்புரவு மேற்பாா்வையாளா் சங்க பொதுக்குழுக் கூட்டம்

DIN

பரமத்தி வேலூரில் தமிழ்நாடு பேரூராட்சிகளின் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் இளங்கோவன் வரவேற்றுப் பேசினாா். மாநில துணைத் தலைவா் ரவி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம் வருமாறு:

தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்கு இளநிலை உதவியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்கு தமிழக அரசு ஊதியத்துடன் கூடிய பயிற்சி வழங்க வேண்டும். கீழ்நிலை பணியாளா்களுக்கு வழங்கப்படும் பதவி உயா்வுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக உயா்த்தி வழங்க வேண்டும். பேரூராட்சிகளில் மத்திய அரசால் தூய்மை இந்தியா திட்டத்தில் நியமிக்கப்பட்ட பரப்புரையாளா்களை வேறுபணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாளா் ஜனாா்த்தனன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT