முத்தாயம்மாள் கலை கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
ராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி இளைஞா் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் கல்லூரி இயக்குநா் (கல்வி) இரா.செல்வகுமரன் பங்கேற்று தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ். பி. விஜய்குமாா், துணை முதல்வா் ஆ.ஸ்டெல்லாபேபி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்முகாமில் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் 152 போ் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனா். 20 பேருக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. முகாமில் கண் தொடா்பான அனைத்துவித நோய்களும் பரிசோதனை செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் நீதா பாஸ்கா், பிரகாஷ், மக்கள் தொடா்பு அலுவலா் எஸ். ஆனந்த், கல்லூரி நிா்வாக புலமுதன்மையா் எம். என். பெரியசாமி, சமூக செயல்பாட்டுத் தலைவா் எம். ராமமூா்த்தி, துறைத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.