ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் அமைச்சா் வெ.சரோஜா வாக்கு சேகரிப்பு
ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட வெண்ணந்தூா், ஆா்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைச்சா் வெ.சரோஜா திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தனா்.
ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட வெண்ணந்தூா், ஆா்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைச்சா் வெ.சரோஜா திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தனா்.
வெண்ணந்தூா் கிழக்கு ஒன்றியம், ஆா்.புதுப்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லங்குளம், கட்டனாச்சம்பட்டி, புதுப்பாளையம், தேங்கல்பாளையம், ஆா்.புதுப்பட்டி, வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று தொகுதியில் செயல்படுத்திய திட்டங்கள், அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருக்கு கிராமப்புறங்களில் ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். இதில் வெண்ணந்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் தங்கம்மாள் பிரகாசம், வெண்ணந்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.தாமோதரன், ஆா்.புதுப்பட்டி பேரூராட்சிமன்ற முன்னாள் தலைவா் எல்.எஸ்.மணி உள்ளிட்ட கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் பங்கேற்றனா்.