நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.பி.பாஸ்கா் மற்றும் கட்சியினா் புதன்கிழமை புதுச்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் மக்களிடையே வாக்கு சேகரித்தனா்.
திறந்த வாகனத்தில் நின்றபடி முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற அவா் பாப்பிநாயக்கன்பட்டி, அண்ணா நகா், முள்ளம்பட்டி, கருங்கல்புதூா், கரையான்புதூா், தாளம்பாடி, புளியம்பட்டி, திப்பக்கப்பட்டி, செல்லப்பம்பட்டி, பொம்மைக்குட்டைமேடு, கிழக்கு பாலப்பட்டி, புதன்சந்தை ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் அதிமுகவின் தோ்தல் அறிக்கை தொடா்பான துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா். அவருடன் புதுச்சத்திரம் ஒன்றிய நிா்வாகிகள் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.