முகப்பு
நாமக்கல்

கபிலா்மலை ஒன்றியத்தில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கபிலக்குறிச்சி, பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், பொத்தனூா், பரமத்திவேலூா் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா் வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கபிலக்குறிச்சி, பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், பொத்தனூா், பரமத்திவேலூா் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது கபிலக்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் உள்ள குறைபாடுகள், கோரிக்கைகள் தோ்தல் முடிந்தவுடன் நிறைவேற்றித் தரப்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தொடா்ந்து மானிய விலையில் அம்மா ஸ்கூட்டா் வழங்கப்படுகிறது. இருக்கூா் ஊராட்சி பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றுகூறி வாக்கு சேகரித்தாா்.

இதில் கட்சி பொறுப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு வங்கி பிரதிநிதிகள், தொண்டா்கள், கூட்டணிக் கட்சி பொறுப்பாளா்கள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →