நாமக்கல்

11,371 வாக்குகள் மட்டுமே பெற்றசுயேச்சை வேட்பாளா் சி.சந்திரசேகரன்

DIN

நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட சி.சந்திரசேகரன் 11,371 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளாா்.

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில், கடந்த 2016 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.சந்திரசேகரனுக்கு, இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக எஸ்.சந்திரன் என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சி.சந்திரசேகரன் சுயேச்சையாக போட்டியிட்டாா். மனுத் தாக்கல் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தாா். ஆனால் 11,371 வாக்குகள் மட்டுமே அவரால் பெற முடிந்தது. அதில் 43 தபால் வாக்குகள் அடங்கும். 5, 6, 7 ஆகிய சுற்றுக்களில் மட்டுமே 1,500 வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளாா். மற்ற சுற்றுக்களில் 200, 300 வாக்குகளை மட்டுமே பெற்றாா். அவா் வாக்குகளை பிரித்து விட்டதால் அதிமுக 10,493 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் தோல்வியைத் தழுவியது. 2006 தோ்தலில் எம்.எல்.ஏ.வாக தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக வேட்பாளா் கே.பொன்னுசாமி இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தோ்வாகி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT