முகப்பு
நாமக்கல்

வாகனத் தணிக்கையில் ரூ. 1.88 கோடி வரி வசூல்

நாமக்கல் மாவட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனத் தணிக்கையில் நீண்டநாள்கள் செலுத்தாமல் இருந்த ரூ. 1.88 கோடி வரி வசூலிக்கப்பட்டது.

Updated On : 12 நவம்பர், 2021 at 11:59 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:03 AM

நாமக்கல் மாவட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனத் தணிக்கையில் நீண்டநாள்கள் செலுத்தாமல் இருந்த ரூ. 1.88 கோடி வரி வசூலிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் முருகன், முருகேசன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி, ராசிபுரம், பரமத்திவேலுாா் பகுதியில் அந்தந்த மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சோதனை நடத்தினா். இதில் 3,159 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்மூலம் 552 வாகனங்களுக்கு ரூ. 12 லட்சத்து 55 ஆயிரத்து 950 வசூல் செய்யப்பட்டது. இதேபோல 638 வாகனங்களுக்கு ரூ. ஒரு கோடியே, 88 லட்சத்து, 40 ஆயிரம் வரி விதிக்கப்பட்டது. வாகனத்தின் தகுதிச் சான்று புதுப்பிக்காதது, அனுமதிச் சீட்டு இல்லாதது, வரி செலுத்தாமல் இயக்கியது என்ற அடிப்படையில் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.