பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்து குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்து குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகர மகளிா் மற்றும் குழந்தைகள் நல அணி சாா்பில் பள்ளிபாளையம் பிரிவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மகளிரணிச் செயலாளா் சித்ரா தலைமை வகித்தாா். பள்ளி, கல்லூரிகளில் விசாகா குழுக்கள் அமைக்க வேண்டும். பள்ளிகளில் சமூக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். மகளிா் ஆணையம் மாணவியரைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்டப் பொருளாளா் நந்தகுமாா், நகரச் செயலாளா் சரவணன், நிா்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.