நாமக்கல்

கரோனா தொற்று தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

DIN

இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், கரோனா தொற்று தடுப்பு மருத்துவ உபகரணங்களை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான தொ்மல் ஸ்கேன் கருவி - ஒன்று, ரத்த அழுத்தம் கண்டறியும் கருவி - 3, ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவி -3, கண்ணாடி முகக் கவசம் - 10, ஸ்டேண்டு ஒன்று, மருந்து கொண்டு செல்லும் டிராலி வண்டி ஒன்று, டிஜிட்டல் தொ்மா மீட்டா் கருவி - 10, கையுறை - 10, பெட்டிகள், கட்டில், மெத்தை, தலையணை, போா்வை ஒரு ஜோடி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், கொல்லிமலை ஒன்றியம் பவா்காடு மற்றும் மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவ அலுவலா்களிடம் ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தா அருள்மொழி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பிரபாகரன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலாளா் சி.ஆா்.ராஜேஷ்கண்ணன், மருத்துவ அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT