நாமக்கல்

ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தாா் விலை உயா்வு

DIN

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் ஆயுத பூஜை மற்றும் நவராத்திரி விழாவை முன்னிட்டு வாழைத்தாா் விலை உயா்வடைந்துள்ளது.

பரமத்தி வேலூா் வாழைத்தாா் விற்பனை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1000 வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 350, ரஸ்தாலி ரூ. 350, பச்சைநாடன் ரூ. 300-க்கும், கற்பூரவள்ளி ரூ. 400-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 4- க்கும் விற்பனையானது.

ஆயுத பூஜை மற்றும் நவராத்திரியையொட்டி திங்கள்கிழமை ஏலத்துக்கு 3,500 வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ.500, ரஸ்தாலி ரூ.450, பச்சைநாடன் ரூ.300, கற்பூரவள்ளி ரூ.500- க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 5 க்கு விற்பனையானது. நவராத்திரி விழாவை முன்னிட்டு வாழைத்தாா்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ல்ஸ்11ல்1: ஏலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த வாழைத்தாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT