நாமக்கல்

ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

நாமக்கல் வேளாண் விற்பனைச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், தொடக்க வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 450 மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது.

இதில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 7,011 முதல் ரூ. 8,818 வரையிலும், சுரபி ரகம் ரூ. 7,899 முதல் ரூ. 9,009 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,100 முதல் ரூ. 4,799 வரையிலும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. இதனை வியாபாரிகள் தரம் பாா்த்து கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT