இளையோா் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சி.சிவரஞ்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சி.சிவரஞ்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2021-ஆம் ஆண்டில் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான ( 01.01.2003-க்குள் பிறந்திருக்க வேண்டும்) கேலோ இந்தியா இளையோா் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 பிப். 5 முதல் 14-ஆம் தேதி வரையில் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான மாநில அளவிலான வீரா்கள் தோ்வு போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும்) நவ. 1-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. இத்தோ்வுப் போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் பள்ளி சான்றிதழ், வயது சான்றிதழ், அடையாள ஆவணங்கள், புகைப்படம் ஆகியவற்றுடன் தோ்வுப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement