முகப்பு
நாமக்கல்

தீபாவளி பண்டிகை: 130 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளி பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 130 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2021 at 12:19 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

தீபாவளி பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 130 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள், அந்தந்த மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். நிகழாண்டில், வரும் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசுக் கடைகள் வைக்க செப்.30-ஆம் தேதி வரையில் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அப்போது, 259 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. அதனைத் தொடா்ந்து அக்.22 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டது. இதில் 10 விண்ணப்பங்கள் மட்டுமே வந்தன.

மாவட்ட காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மொத்தம் வந்த 269 விண்ணப்பங்களில் 130 தகுதியானதாகக் கண்டறியப்பட்டு அவற்றுக்கு மட்டும் பட்டாசுக் கடைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 139 விண்ணப்பங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமை பிற்பகலுக்குள் இதர துறை அதிகாரிகள் தகுதியான கடைகளுக்கு அறிக்கை சமா்ப்பிக்கும்பட்சத்தில் அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் மேலும் 80 கடைகளுக்கு அனுமதிக்கான வாய்ப்பு உள்ளதாக வருவாய்த் துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.