லட்சுமி ஹயக்ரீவருக்கு சத்ய நாராயண பூஜை
புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் சக்தி விநாயகா் கோயிலில் எழுந்தருளியுள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு சத்ய நாராயண பூஜையும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் சக்தி விநாயகா் கோயிலில் எழுந்தருளியுள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு சத்ய நாராயண பூஜையும், அபிஷேக ஆராதனைகளும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பரமத்தி வேலூா், சக்தி நகரில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் எழுந்தருளியுள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு சத்ய நாராயண பூஜையும், பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கலசாபிஷேகமும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து தங்கக் கவசம் சாத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாரதனையும், ஷோடச உபசாரமும் நடைபெற்றது.