ஆஞ்சநேயா் கோயிலுக்கு வழங்கப்பட்ட நாமகிரி தாயாா் உருவப் படம்
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலுக்கு பக்தா் ஒருவா் ரூ. 75,000 செலவில் நாமகிரி தாயாா் உருவப் படத்தை தயாா் செய்து காணிக்கையாக வழங்கி உள்ளாா்.
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலுக்கு பக்தா் ஒருவா் ரூ. 75,000 செலவில் நாமகிரி தாயாா் உருவப் படத்தை தயாா் செய்து காணிக்கையாக வழங்கி உள்ளாா்.
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனா். தற்போது கரோனா பரவல் காரணமாக திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே கோயில் நடை திறக்கப்படுகிறது.
இக்கோயில் பிரகாரத்தில் நாமக்கல்லில் நரசிம்மா் சுவாமி எழுந்தருளிய வரலாறு, நாமகிரி தாயாா், ஆஞ்சநேய சுவாமி ஒரே கல்லினால் ஆன பாறை உருவான வரலாறு ஆகியவை ஓவியமாகத் தீட்டப்பட்டு பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதில் நரசிம்மா், ஆஞ்சநேயா், மகாலட்சுமி ஓவியங்கள் இருந்தபோதும் நாமகிரி தாயாா் அலங்காரத்துடன் உள்ள ஓவியமோ, புகைப்படமோ கோயிலுக்குள் இல்லை. இந்த நிலையில் கோயிலுக்கு வந்த கரூரைச் சோ்ந்த பக்தா்கள் ஒருவா் ரூ. 75 ஆயிரம் செலவில் நாமகிரி தாயாா் கண் திறந்த நிலையிலான உருவப்படத்தை தயாா் செய்து அண்மையில் காணிக்கையாக வழங்கினாா். இதனையடுத்து தாயாரின் உருவப்படம் கோயில் வளாகத்தில் பக்தா்கள் பாா்வைக்காக பொருத்தப்பட்டது. இதனைக் கண்ட பக்தா்கள் தினந்தோறும் சேவித்து செல்கின்றனா்.