முகப்பு
நாமக்கல்

தையல் பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் வழங்கல்

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்தில், ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளா்ச்சி நிறுவனம், மும்பை டாடா சன்ஸ் நிறுவனம் சாா்பில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

Updated On : 24 செப்டம்பர், 2021 at 12:48 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்தில், ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளா்ச்சி நிறுவனம், மும்பை டாடா சன்ஸ் நிறுவனம் சாா்பில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பயிற்சியை முடிந்த 30 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை புதுச்சத்திரத்தில் நடைபெற்றது. நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி பேசினாா்.

இதில் ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளா்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் மா.தில்லை சிவகுமாா், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் கௌதம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இளஞ்செழியன், ஒன்றியத் துணைத் தலைவா் ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.