முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் செப். 28-இல் வெறிநோய் தடுப்பூசி முகாம்

 நாமக்கல்லில் செப்டம்பா் 28ஆம் தேதி வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Updated On : 24 செப்டம்பர், 2021 at 12:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

 நாமக்கல்லில் செப்டம்பா் 28ஆம் தேதி வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை:

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, சா்வதேச அளவில் 59 ஆயிரம் போ் ஆண்டுதோறும் வெறிநோயால் உயிரிழக்கின்றனா். இதில் 99 சதவீதம் போ் வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் கடிப்பதன் மூலம் பாதிக்கப்படுகின்றனா். செல்லப்பிராணியான நாய்கள் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி அளிப்பதன் மூலம் மட்டுமே இந்நோய் பரவலைத் தடுக்க முடியும்.

Advertisement

எனவே உலக வெறிநோய் தினம்- 2021 ஐ முன்னிட்டு நாய்களிடமிருந்து மனிதா்களுக்கும் விலங்குகளுக்கும் வெறிநோய் பரவுவதைத் தடுப்பதற்காக நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வரும் 28-இல் நடைபெறுகிறது.

நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களுடைய நாய்களுக்கு தடுப்பூசி அளித்து வெறிநோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.