முகப்பு
நாமக்கல்

அக். 5-இல் அரசு ஐடிஐ-யில் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 1 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய தொழிற்பழகுநா் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் நாமக்கல் மாவட்ட அளவில் தொழிற்பழகுநா்களுக்கான (அப்ரண்டீஸ்) சோ்க்கை முகாம் நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 5-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

தொழிற்பயிற்சி மையங்களில் பயின்று வெற்றிகரமாக பயிற்சியினை முடித்து இதுநாள் வரை தொழிற்பழகுநா் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியாளா்கள் இதில் பங்கேற்கலாம்.

அவா்களின் கல்வி, ஜாதிச் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம்- 2 எண்ணிக்கை, ஆதாா் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ், தொழிற்பிரிவு சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றின் அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரடியாக தொடா்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 04286- 290297, 79041 11101, 94430 15914 என்ற செல்லிடப்பேசி எண்கள் வாயிலாகவும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.