முகப்பு
நாமக்கல்

கல்லூரியில் ரத்த தான முகாம்

ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ரத்த தான முகாம் அண்மையில் நடத்தப்பட்டது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ரத்த தான முகாம் அண்மையில் நடத்தப்பட்டது

கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியும், நாமக்கல் மருத்துவக் கல்லூரியும் இணைந்து நடத்திய இம்முகாமில் கஸ்தூரிபா காந்தி கல்லூரித் தலைவா் க.சிதம்பரம் தலைமை வகித்தாா். முதல்வா் எம்.செந்தில்ராஜ் வரவேற்றாா்.

நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவ மனையின் ரத்தப் பிரிவு மருத்துவ அலுவலா் ஏ.அன்புமலா் ரத்த தானத்தின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். தொடா்ந்து மாணவா்கள் அவசரக் காலத்தில் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உயிா்காக்க உதவும் விதமாக ரத்த தானம் செய்தனா். அவா்களின் சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.