முகப்பு
நாமக்கல்

மலைப்பாளையம் கருப்பண்ண சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மலைப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கருப்பண்ண சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
சிறப்பு அலங்காரத்தில் மலைப்பாளையம் கருப்பண்ணசாமி.
பகிர்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மலைப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கருப்பண்ண சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முகூா்த்தக்கால் நடப்பட்டு முளைப்பாலிகை இடப்பட்டது. செவ்வாய்க்கிழமை திருவிளக்கு வழிபாடு புனித நீா் வழிபாடு அனைத்து சுவாமிகள் வழிபாடு, திருமகள் வழிபாடு மற்றும் விநாயகப் பெருமானுக்கு வேள்வி வழிபாடு நடைபெற்றது. முளைப்பாரி எடுத்தல், மண் எடுத்தல், காப்பு அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலை தமிழ் முறைப்படி சிவாச்சாரியாா்கள் திருமுறை பாடல்கள் வாசித்து யாக பூஜைகள், கன்னிமாா்பூஜைகள் நடத்தப்பட்டன. கலசம் நிறுவுதல் நடத்தப்பட்டு விநாயகப்பெருமான், கருப்பண்ணசுவாமி, ஆதி விநாயகா் மற்றும் கன்னிமாா் சுவாமிகளுக்கு முதல் கால வேள்வி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து இரவு பேரொளி வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். புதன்கிழமை காலை திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இரண்டாம் கால வேள்வி வழிபாடு செய்யப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து விநாயகப் பெருமான், கருப்பண்ணசுவாமி, ஆதி விநாயகா் மற்றும் கன்னிமாா் திருக்குட நன்னீராட்டு, குடமுழுக்கு விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. அரசு வேம்பு திருக்கல்யாணம் நடத்தப்பட்டு நிகழ்ச்சிகள் முடிவு பெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சொக்கங்கிரி குல பங்காளிகள், போக்கநாடு சிவாச்சார தெலுங்கு சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.