முகப்பு
நாமக்கல்

பிராந்தகம் ஆறுமுகக்கடவுள் கோயிலில் திருக்கல்யாணம்

பரமத்தி வேலூா் தாலுகா, பிராந்தகத்தில் எழுந்தருளியுள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக் கடவுள் கோயிலில் திருக்கல்யாணம், தவத்திரு மணி சுவாமிகளுக்கு குருபூஜை மற்றும் கலசபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

பரமத்தி வேலூா் தாலுகா, பிராந்தகத்தில் எழுந்தருளியுள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக் கடவுள் கோயிலில் திருக்கல்யாணம், தவத்திரு மணி சுவாமிகளுக்கு குருபூஜை மற்றும் கலசபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி புனித தீா்த்தக் குடங்களுடன் ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா். மாலை 5 மணிக்கு கோ பூஜையும், 6 மணிக்கு 108 குத்துவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு ஆன்மீக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் யாகமும், 108 கலச பூஜையும் நடைபெற்றது. காலை 11 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக கடவுளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும்,12 மணிக்கு மேல் தவத்திரு மணி சுவாமிகளுக்கு குரு பூஜை விழாவும் நடைபெற்றது. விழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகக்கடவுளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிராந்தகம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை பிராந்தகம் ஆறுமுகக் கடவுள் கோயில் விழாக்குழுவினா், ஊா் பொதுமக்கள் மற்றும் பிராந்தக காவடிக் குழுவினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →