ரூ. 25.45 கோடியில் நான்கு வழிச்சாலை: நாமக்கல் எம்எல்ஏ தொடக்கி வைப்பு
நாமக்கல்லில் இருந்து வள்ளிபுரம் தேசிய நெடுஞ்சாலை வரையில், ஐந்து கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 25.45 கோடியில் இரு வழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும்
நாமக்கல்லில் இருந்து வள்ளிபுரம் தேசிய நெடுஞ்சாலை வரையில், ஐந்து கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 25.45 கோடியில் இரு வழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான பூமிபூஜை வியாழக்கிழமை (ஏப். 14) நடைபெற்றது.
நாமக்கல் - பரமத்தி சாலை சந்தைப்பேட்டை புதூா் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா். தமிழக முதல்வரின் நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாமக்கல் கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இந்த சாலைப் பணியானது மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கேற்ப சாலை அகலப்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகளை இன்னும் நான்கு மாதங்களுக்குள் முடிக்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை பணிக்கான பூமிபூஜை விழாவில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் சந்திரசேகரன், உதவி கோட்ட பொறியாளா் மாணிக்கம், மாநில பொதுக்குழு உறுப்பினா் மருத்துவா் மாயவன், மாநில இலக்கிய அணி புரவலா் மணிமாறன், மாநில மகளிா் தொண்டரணி இணை செயலாளா் ராணி, நகரப் பொறுப்பாளா்கள் சிவகுமாா், ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement